கனடா ரொரன்ரோவில் ஏற்படும் காலநிலை மாற்றம்

கனடாவின் ரொரன்ரோவில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்துடன் சிறிய கோடைகாலம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் வரை உயரும் என்றும், முழு நாளும் வெயிலுடன் இருக்கும் என்றும் கானடாவின் தேசிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொராண்டோ மீது ஒரு மழை பட்டை நேரடியாக உருவாகி நீண்ட நேரம் நீடித்ததாக அறிக்கையாளர் பில் கோல்டர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமையிலிருந்து மீண்டும் மழை திரும்பும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இப்போது சீரான காலநிலை மீண்டும் திரும்பியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில், வழக்கமான வெப்பநிலையைவிட தினசரி உயர்ந்த வெப்பநிலைகள் மிகக் குறைவாகவே இருந்தன.
புதன்கிழமை (மே 29), வெப்பநிலை மாறி மீண்டும் குளிர்ச்சி மற்றும் மழை சாத்தியமுள்ளதாக கூறப்பட்டுள்ளது – அந்த நாளின் அதிகபட்ச வெப்பநிலை 14°C மட்டுமே இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.