மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் ; பயணப் பாதைகளை மாற்றும் விமான நிறுவனங்கள்
இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் அண்டை நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாக விமானச் சேவையைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட்ரேடார்24’ இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.துருக்கியின் இஸ்தான்புல், அண்டல்யா நகர்களின் வான்வெளியில் நெரிசல் அதிகரித்ததாக ஃபிளைட்ரேடார்24 கூறியது. இதனால், சில விமானப் பாதைகள் தெற்கே மாற்றிவிடப்பட்டன.
துபாய், தோஹா, அபுதாபி போன்ற நகர்களுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவிருந்த ஏறக்குறைய 80 விமானச் சேவைகள், கைரோவுக்கும் ஐரோப்பிய நகர்களுக்கும் மாற்றிவிடப்பட்டன.
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக எத்திஹாட் ஏர்வேஸ் புதன்கிழமை அதன் பல [Ϟ]விமானச் சேவைகளை மாற்றி[Ϟ]விட்டது.விமான நிறுவனங்களும் பலவும் மத்திய கிழக்கிற்கு விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
ஈராக், ஈரான், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானச் சேவைகளையும் எமிரேட்ஸ் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் ரத்து செய்தது.ஈராக், ஈரான் நாடுகளுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளை கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஜோர்தான், ஈராக், இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமையும் வியாழக்கிழமையும் ஃபிளைதுபாய் விமானச் சேவைகளை ரத்து செய்தது.கவைத் ஏர்வேஸ் அதன் சில விமானச் சேவைகளுக்கான பயணப் பாதைகளை மாற்றி உள்ளது.