போர் பதற்றம் – துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜெர்மனி!
ஜெர்மனியில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயதுடைய அனைத்து ஆண்களும் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களா என்பது குறித்த கேள்வித்தாளை நிரப்பவும், 2027 முதல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் கட்டாயப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்க பெர்லின் (Berlin) இலக்கு வைத்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.
ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று நம்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் வாக்கெடுப்பிற்கு விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ கூட்டணி நான்கு ஆண்டுகளுக்குள் சாத்தியமான ரஷ்ய தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று ஜெர்மன் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் (Gen Carsten Breuer) எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




