இலங்கை செய்தி

போர் பதற்றம் – இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவசர இலக்கம்

 

மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி அவசர அழைப்புக்காக (Hotline) 1989 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் WhatsApp / Imo: +94 71 980 2822 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதையும்
இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக, அங்கிருக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில்
அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!