இலங்கை செய்தி

போர் பதற்ற நெருக்கடி – இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவத்த அவர்

“வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 க்கு ஊடக சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது.

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!