ஒரு பக்கம் போர், மறுபக்கம் குளிர் : தவிக்கும் உக்ரைன் மக்கள்!
உக்ரைனின் பல பகுதிகளில் வெப்பநிலையானது -20 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ள நிலையில் மக்கள் குளிரில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் மின்சாரக் கட்டமைப்பை சீர்குலைத்துள்ள நிலையில், உக்ரைன் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் குறைவடைந்துள்ள வெப்பநிலையை சமாளிக்க போராடி வருகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொடூரமான குளிர்” காலத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்த விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் ஒருவாரத்திற்கு மட்டுமே அமுலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அந்த ஒருவாரக் காலப்பகுதி நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




