ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஆரம்பம்!
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் போர் தொடுப்பதாக வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் நேற்று இரவில் அதிகரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இதற்கமைய பாகிஸ்தான் படைகள் காபூல் (Kabul), காந்தஹார் (Kandahar) மற்றும் பாக்டியா (Paktia) மாகாணங்களில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை தலிபான்கள் முன்னெடுத்திருந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
காபூலில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் மேலே பறந்ததைக் கண்டதாகவும் நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் குண்டுவெடிப்புகளை “பூகம்பம் போன்றது” என்று விவரித்தனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தனது எக்ஸ் தளத்தில், பாகிஸ்தானின் பொறுமை அதன் எல்லையை எட்டியதாகவும், தற்போது எங்களுக்கும் உங்களுக்கும் இடையே வெளிப்படையான போர் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளார்.





