இலங்கை

இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலே வரவேண்டும் – வியாழேந்திரன் கருத்து!

இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய ஜனாதிபதியே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று (30.03)  மட்டக்களப்பில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மகேந்திர சிங் தோனி – அணியை வெற்றி பெற செய்வதே அவரது இலக்காக கொண்டு அவருடைய அணிக்கு அனைத்து கிண்ணங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இன்று இருட்டுக்குள் திட்டுவதற்கு பலர் உள்ளார்கள், ஆனால் அந்த இருட்டுக்குள் வெளிச்ச மேத்த யாரும் முன் வருவதில்லை. முன்னால் ஜனாதிபதி கூப்பிட்டார் யாராவது வந்து நாட்டை பொறுப்பெடுங்கள் என்று ஆனால் யாரும் முன்வரவில்லை.

இப்போது  நாடு இருக்கும் நிலைக்கு தற்போது இருக்கிற ஜனாதிபதிதான் சரி. ஜனாதிபதியை நான் இதற்கு முன்னர் விமர்சித்திருந்தாலும் இப்போதைய காலகட்டத்திற்கு அவர் தான் சரி” எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதன்போது பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து பேரணி ஆரம்பமாக தேவநாயகம் மண்டபம் வரையில் வருகைதந்தது.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நடனக் கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுத் துறைக்கு பங்காற்றிய மகளிருக்கு இராஜாங்க அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், இதன் போது கூட்டுறவு சங்கங்களினால் இராஜாங்க அமைச்சரிடம் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றைக் கோரி மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்