ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று ஆரம்பமானது.
ஐரோப்பிய தேர்தல்களின் முதல் நாளில் நெதர்லாந்து வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
அதேநேரம் அயர்லாந்து மற்றும் செக் குடியரசில் நாளைய தினமும் மால்டா, ஸ்லோவாக்கியா மற்றும் லாத்வியா ஆகிய நாடுகளில் நாளை மறுதினமும் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.





