ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு – 800 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மாற்றம்
ஐஸ்லாந்து தலைநகரின் தெற்கே செவ்வாய்க்கிழமையான நேற்று எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் எரிமலைக்குழம்பு மற்றும் புகை வெளியேறியுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளியேற்ற தூண்டியுள்ளது. எனினும் விமான போக்குவரத்து வழமை போல் இடம்பெற்று வருகிறது.
ஏராளமான பனிப்பாறைகள் மற்றும் எரிமலைகள் சூழ்ந்த வட அந்திலாந்திக் தீவான ஐஸ்லாந்தில் 2021 ஆம் ஆண்டு முதல் ரெய்க்ஜாவிக் நகரின் தெற்கே 11 எரிமலைகள் வெடித்துள்ளன. சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னர் செயலற்று இருந்த எரிமலைகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.
எரிமலை வெடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வளிமண்டலவியல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





