பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய எரிமலை : மக்ககள் உடனடியாக வெளியேற உத்தரவு

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் உள்ள எரிமலை வெடித்ததை அடுத்து, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புகை, கற்கள் ஆகியவற்றை கன்லாவோன் எரிமலை 5 கிலோமீட்டர் உயரத்துக்குக் கக்கியது.
கூடுதல் வெடிப்புகளுக்கான சாத்தியம் இருப்பதாக பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலையின் அடிவாரத்தில் உள்ள ஆறுகள் கரைபுரண்டு திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக துயர்துடைப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கன்லாவோன் நகரின் மேயர் ஜோசே சுபாஸ்கோ கார்டேனாஸ் உத்தரவிட்டுள்ளார்.
(Visited 24 times, 1 visits today)