இத்தாலியில் குமுறும் எரிமலை – பார்வையிட குவியும் ஆயிரக்கணக்கான மக்கள்

இத்தாலியின் சிசிலி தீவில் குமுறும் எட்னா எரிமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகில் அடிக்கடி குமுறும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்றாகும். எனினும் குமுறும் எரிமலைக்கு இடையே அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான சுற்றுப்பயணிகள் வழிகாட்டிகளுடனும் தயாராக வருகின்றனர். எனினும் கூட்டம் அதிகம் உள்ளதால் மீட்பு வாகனங்களுக்கான வழிகள் மறைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எரிமலையில் மீட்பு ஊழியர்களும் அவசர மருத்துவ வாகனங்களும் இருப்பது முக்கியம்.
(Visited 6 times, 1 visits today)