இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் லெவோடோபி மலையில் எரிமலை வெடித்து சிதறியுள்ளதை தொடர்ந்து சாம்பல்கள் வெளியேறிவருகின்றன.
எரிமலை 32,000 அடி உயரத்திற்கு சாம்பலை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
எரிமலையின் இரண்டு மைல் சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் எரிமலை நிறுவனம் எச்சரிக்கையை அதன் உச்ச நிலைக்கு உயர்த்தியது. எரிமலைக்குழம்பு ஓட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து உள்ளூர்வாசிகளையும் எச்சரித்தது.
(Visited 12 times, 1 visits today)





