இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை
இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லாகி (Mount Lewotobi Laki-Laki) எரிமலை இன்று (15) வெடித்துள்ளது. எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
லெவோடோபி லாக்கி லாக்கி எரிமலை கிழக்கு நூசா தெங்காரா (Nusa Tenggara) மாநிலத்தில் உள்ளது.
இந்தோனேஷிய நேரப்படி அது அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர். வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை இந்தோனேஷியாவின் புவியியல் ஆணையம் வெளியிட்டது.
எரிமலை வெடிப்புக்குப் பிறகு கனமழை தொடர்ந்தால் அப்பகுதியில் பேரளவில் சேறு சரிந்து வரும் என்று எரிமலைக்கு அருகில் வசிக்கும் கிராமவாசிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எரிமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் முதல் ஏழு கிலோ மீட்டர் வரையிலான தூரம் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





