மத்திய பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய எரிமலை : மக்கள் வெளியேற்றம்!

மத்திய பிலிப்பைன்ஸில் இன்றைய தினம் (08.04) அதிகாலை ஒரு எரிமலை வெடித்துள்ளது.
நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லான் மலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.51 மணிக்கு வெடித்து சாம்பலை கக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது, காலை 6.47 மணியளவில் முடிவடைந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு நிறுவனம் (Phivolcs) தெரிவித்துள்ளது.
டிசம்பரில் முந்தைய வெடிப்பிலிருந்து சுற்றியுள்ள பகுதிகள் ஏற்கனவே வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாகவும், இது உடனடி அபாயங்களைக் குறைக்க உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)