ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எந்த நேரத்திலும் எரிமலைகள் வெடிக்‍கும் அபாயம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

கிரின்டாவிக் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் ஆபத்து குறைந்தாலும் வீடுகளுக்குச் செல்ல பல மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள மக்கள் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தின் கீழ் எரிமலை வெடிக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆபத்து பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்லாந்தில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்‍கு முன் ஐஸ்லாந்து நாட்டில், 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்நிலையில் அங்கு சுமார் 33 எரிமலைகள் உள்ளதால் அவை வெடிக்‍கும் என்று எச்சரிக்‍கப்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்‍கலாம் என்பதை காட்டும் வகையில் விரிசல் விழுந்த சாலைகளில் இருந்து நீராவி வெளியேறி வருவதால் மக்‍கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்