அமெரிக்காவில் விவேக் ராமசாமி – எலோன் மஸ்க்கிற்கு முக்கிய பதவிகளை வழங்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப் முக்கியப் பதவிகளுக்குத் தலைவர்களை அறிவித்து வருகிறார்.
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக Fox தொலைக்காட்சிப் படைப்பாளர் பீட் ஹெக்செத் அறிவிக்கப்பட்டார். அவர் முன்பு அமெரிக்க ராணுவத்தில் சேவையாற்றியவர்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்குத் மைக்கல் வால்ட்ஸ் , மத்தியக் கிழக்குத் தூதராக ஸ்டீவ் விட்கொஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஸ்டீவ் விட்கொஃப் சொத்துச் சந்தைத் தொழிலதிபராகும்
புதிதாக அமைக்கப்படும் அரசாங்கச் செயல்திறன் அமைச்சுக்கு X சமூக ஊடகத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க்கையும், ஜனாதிபதி வேட்பாராகப் போட்டியிட்ட விவேக் ராமசாமியையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
78 வயது டிரம்ப் அண்மைய தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாம் முறையாக ஜனாதிபதியாகவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி அவர் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.