ஜெர்மனியில் பல லட்சம் யூரோவுக்கு விற்கப்பட்ட விசாக்கள் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஜெர்மனியில் பல லட்சம் யூரோவுக்கு விசாக்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனி பொலிசார் சமீபத்தில் பத்து பேரை கைது செய்துள்ளனர், அவர்களில் இரண்டு வழக்கறிஞர்கள் எனவும் சர்வதேச மனித கடத்தல் குழுவில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 350 சீன பிரஜைகளை சட்டவிரோதமாக ஜேர்மனிக்கு அழைத்து வந்ததாக இந்த குழு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெர்மன் பொலிஸார் 101 வீடுகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இக்குழுவில் 38 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அதிகாரிகள் 38 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 147 பேர் கொண்ட குழுவை விசாரித்து வருகின்றனர்.
கொலோன் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இரண்டு சட்டத்தரணிகளும் பிரதான சந்தேக நபர்களில் அடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தனியுரிமை விதிகள் காரணமாக அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சட்டவிரோத விசா உதவிக்காக வாடிக்கையாளர்கள் €30,000 முதல் €350,000 வரை சட்ட நிறுவனங்களுக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த பணம் போலி நிறுவனங்களை நிறுவவும், போலி வீட்டுமனைகளுக்கு நிதியளிக்கவும், சம்பள கொடுப்பனவுகளில் மோசடி செய்யவும் பயன்படுத்தப்பட்டது. சந்தேகநபர்கள் கணிசமான பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.