பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களை வேட்டையாடிய விசா மோசடி
பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்காக போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுக்கும் மோசடி குறித்த தகவலை பிபிசி செய்தி சேவை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு தாதியர் வேலை வழங்குவதாக கூறி இவ்வாறு தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
அங்கு, மாணவர்கள் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் செலுத்தி முக்கியத்துவம் இல்லாத விசா ஆவணங்களைத் தயாரித்துள்ளனர்.
மேலும் மாணவர்கள் திறமையான தொழிலாளர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களின் ஆவணங்கள் செல்லாதவை என உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்படுகிறது.
ஆனால் இந்த போலி அமைப்பு அவர்களுக்கு சர்வதேச மாணவர் ஆட்சேர்ப்பு முகவர்களாக பராமரிப்பு துறையில் வேலை இருப்பதாக கூறியுள்ளது.
ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களுக்காக மாணவர்கள் தலா 17,000 பவுண்ட்ஸ் செலுத்தியுள்ளனர்.
தைமூர் ராசா என்ற ஒரு நபர், இந்த வழியில் 141 விசா ஆவணங்களை விற்று, மதிப்பற்ற ஆவணங்களை மாணவர்களுக்குக் கொடுத்து, சுமார் 1.2 மில்லியன் பவுண்ட்ஸ் சம்பாதித்துள்ளார்.
ஆனால் சர்வதேச மாணவர்களை வேட்டையாடும் நபர் தான் தவறு செய்யவில்லை என்று மறுத்து அந்த பணத்தில் ஒரு பகுதியை மாணவர்களுக்கு திருப்பி கொடுத்துள்ளதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.