மனைவியை விட்டு பிரியும் வீரேந்திர சேவாக்..?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் ஆகியோர் 20 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் அதிரடி ஓபனர்களில் குறிப்பிடத்தக்க ஓப்பனராக இருந்தவர் வீரேந்திர சேவாக். இவர் இந்திய அணியில் இதுவரை, 104 டெஸ்ட் போட்டிகளும், 251 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும், 19 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சேவாக் – ஆர்த்தி தம்பதியினர், இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் சென்ற இடங்களுக்கெல்லாம் தனியாகவே சென்றுள்ளார். இது விவாகரத்து வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும் கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சேவாக் தனது இரண்டு மகன்களான ஆர்யவீர் மற்றும் வேதாந்த் ஆகியோருடன் கொண்டாடிய புகைப்படங்களையே சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் ஆர்த்தி இடம்பெறவில்லை. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாயகக்ஷி கோவிலுக்கு சேவாக் சென்றிருந்த போதும், ஆர்த்தி குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தொடர்ச்சியான இந்த நிகழ்வுகள் பிரிவினை குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
சேவாக் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விவகாரத்தை கூர்ந்து நோக்கும் ரசிகர்கள் இதை உறுதிபட தெரிவிக்கின்றனர்.