விளையாட்டு

2வது போட்டியில் களமிறங்கும் விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் திகதி நடைபெற்ற நிலையில்,அதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது என்பதால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும்.

இதனை கருத்தில்கொண்டு தான் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 9-ஆம் திகதி கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, போட்டியில் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் மற்றும் இதற்கு முன்பு இரண்டு அணிகளும் மோதிய போட்டிகளில் எத்தனை போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

நேருக்கு நேர்

இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 108 முறை மோதியுள்ளன. இந்த 107 போட்டிகளில், இந்தியா 59 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, இங்கிலாந்து 44 முறை வெற்றிபெற்றுள்ளது.

விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

இந்தியா : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா

இங்கிலாந்து : பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (w/c), ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர்

களமிறங்கும் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரர் விராட் கோலி வலது முழங்கால் காயம் காரணமாக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. எனவே, மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-வது போட்டியில் அணிக்கு திரும்பிகிறார். எனவே, அவருடைய ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

முதல் போட்டியில் அவருக்கு பதிலாக ஜெய்ஷ்வால் களமிறங்கினார். இதனையடுத்து விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பவுள்ள காரணத்தால் 2-வது போட்டியில் ஜெய்ஷ்வால் வெளியே இருப்பார். மேலும், அடுத்த ஆட்டத்திற்கு அவர் நிச்சயமாக உடற்தகுதி பெறுவார் என விராட் கோலி அடுத்த போட்டியில் விளையாடுவதை சக வீரரான சுப்மன் கில் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ