மிகப்பெரிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-on-the-cusp-of-achieving-big-ODI-milestone.webp)
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூட்டுவலி காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் தற்போது விராட் கோலி பூரண உடற்தகுதியுடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த போட்டியில் விராட் கோலி பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது.
இதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைக் கடக்க விராட் கோலிக்கு இன்றும் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.
இந்தநிலையில் விராட் கோலி நாளைய தினம் குறித்த மைல் கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் 14,000 ஓட்டங்களை மிக குறைந்த போட்டியில் எடுத்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைப்பதற்கு வாய்ப்புள்ளது.
இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 50 சதங்கள் மற்றும் 72 அரைசதங்கள் அடங்களாக 13,906 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.