டிக்டொக் தளத்தில் வைரலாகும் புதிய சேலஞ்ச் : வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

தற்போது சமூகவலைத்தளமான டிக்டொக்கில் வெற்றுகால்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும் முறை ட்ரெண்டாகி வருகிறது.
பார்பி” என்ற வெற்றிப் படத்திலிருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி அதனை ஒரு சேலஞ்ச் வீடியோவாக பயனர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கால் நிபுணர் டாக்டர் சாரி பிரைசண்ட், இந்த நடைமுறைக்கு எதிராக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டாயம் காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வெறுங்காலுடன் நடப்பது ஒரு தனித்துவமான இயற்கையான நிலை என்று நெட்டிசன்கள் நினைக்கிறார்கள், அது கால்களின் மீது சமமாக எடையைத் தாங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)