இலங்கை செய்தி

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவை அதிகளவு பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

“சிறுவர்களிடையே இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுகின்றன.

சிறுவர்களிடையே குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், நோய் அறிகுறிகளை உன்னிப்பாகக் அவதானித்து பெற்றோர்கள் வைத்தியர் உதவியை நாட வேண்டும்.

தற்போது பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பரவி வருகிறது.

சிறுவர்களின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில், வாயைச் சுற்றி அல்லது மேல் பிட்டங்களில் சிறிய நீள்வட்ட வடிவில் வெள்ளை கொப்புளங்கள், அதே போல் வாயில் பழுப்பு அல்லது சிவப்பு தோல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கின்றதா என பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும்.

இந்த அறிகுறிகளில் சில இன்ப்ளூயன்ஸாவின் அறிகுறிகளைப் போலவே இருப்பதாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். டெங்கு காய்ச்சலை கண்டறிய இரத்த பரிசோதனையும் செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சல் இறப்பு விகிம் 0.1 சதவீதம் அபாயகரமான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதற்கு சிறப்பு கவனம் தேவை

பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பதோடு, தங்கள் பிள்ளைகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை