யாழில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று யாழில் நடாத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐஓஎம் அலுவலகம் முன்பாக இன்று காலை இப் போராட்டம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)