என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வெடித்த வன்முறை! அன்புமணி ராமதாஸ் கைது
என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
அன்புமணி சென்ற போலீஸ் வாகனத்தை பாஜகவினர் மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மீது பாமகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர்.