பிரித்தானியாவில் தொடரும் வன்முறை: பொலிஸாருக்கு முழு அதிகாரம் வழங்கிய பிரதமர்

பிரித்தானியாவின் தெருக்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பொலிஸார் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அரசு துணை நிற்கும் என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறை வெடித்தது.மேலும் தீவிர வலதுசாரி ஆதரவாளர் அமைப்புகள் தற்போது நாடு முழுவதும் குறைந்தது 9 நகரங்களில் இது தொடர்பான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் தெருக்கள் கலவரகாரர்களிடம் இருந்தும், வெறுப்பு பரப்புபவர்களிடம் இருந்தும் பாதுகாப்பானதாக மீண்டும் திரும்ப பொலிஸார் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு முழு ஆதரவு வழங்கும் என பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
(Visited 23 times, 1 visits today)