ஆப்பிரிக்கா

மொசாம்பிக்கில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வெடித்த வன்முறை : 10 பேர் பலி!

மொசாம்பிக் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை அதிகாரிகள் முறியடித்ததில் குறைந்தது 10 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளால் மோசடி என்று விமர்சிக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மொசாம்பிக் விடுதலைக்கான ஆளும் முன்னணியின் டேனியல் சாப்போ அக்டோபர் 24 அன்று நடந்த தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

1975 இல் போர்ச்சுகலில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஃப்ரெலிமோ கட்சியின் 49 ஆண்டுகால ஆட்சியை நீட்டிக்கிறார்.

இந்நிலையில் தற்போதைய வெற்றி மோசடியால் பெறப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன.

அக்டோபர் 18 முதல் அக்டோபர் 26 வரை நடந்த போராட்டங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 10 பேர் இறந்தனர், மேலும் 63 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்று மொசாம்பிக் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு