அமெரிக்காவில் சட்டம் மீறினால் வாழ்நாள் முழுவதும் விசா இரத்து – அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

அமெரிக்காவில் சட்டத்தை மீறுகிறவோ, குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவோ என்றால், அந்த வெளிநாட்டவர்களின் விசா வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் சமூகமாக அமெரிக்கா விளங்குகிறது. இந்த நிலையில், வெளிநாட்டவர்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது. எனவே, யாரேனும் சட்டம் மீறினால் அவர்களின் விசா இரத்து செய்யப்படும். மேலும், அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படும்.
இந்த நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், அனைத்து வெளிநாட்டவர்களும் அமெரிக்கா செல்லும் முன் இதனை தெளிவாகக் கவனிக்க வேண்டும்” என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.