விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்… புளூசட்டை மாறனின் பதிவு
விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், விஜய் காந்தின் ஏ.ஐ வரவு இதில் பிளஸ் பொய்ன்ட்டாக இருக்கின்றது.
இந்த நிலையில், விஜய்யின் அப்பா செந்தூர பாண்டியன் படம் குறித்து பேசிய சில வார்த்தைகளை புளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“செந்தூர பாண்டியில் விஜய்யுடன் பிரபல நடிகர் நடித்தால் படம் வெற்றி பெறும். அது விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என நினைத்தேன்.
ஆகவே விஜயகாந்திற்கு போன் செய்து ‘உங்களை சந்திக்க வரலாமா?’ என கேட்டேன். உடனே போனை வைத்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரே என் வீட்டிற்கு வந்தார். ‘என்ன விஷயம் சார்?’ என்றார். நான் விபரம் சொன்னேன்.
‘எத்தனை நாள் கால்ஷீட் தரனும்? எப்ப வரனும்’ என்று உடனே ஓகே சொன்னார்.
‘உங்களுக்கு சம்பளம் எவ்வளவு தரனும்?’ என கேட்டேன்.
‘எனக்கு எதுவும் வேண்டாம். படம் நல்லபடியா முடியனும். விஜய் தம்பி ஜெயிக்கனும். அது போதும்’ என்றார்.
விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்
– S.A.சந்திரசேகர்.”