அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வந்த செய்தி
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர்.
அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 13 times, 1 visits today)





