செய்தி பொழுதுபோக்கு

விடாமுயற்சி – ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.

முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.

மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது.

இவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ஆரவ் மற்றும் ரெஜினா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் ஆரவ் இதற்கு முன் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.

வருகிற தீபாவளி பண்டிகைக்கு விடாமுயற்சி படம் வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில், நடிகர் அர்ஜுன் விருது விழா மேடையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதன்படி, விடாமுயற்சி படத்தின் இறுதி சண்டை காட்சியில் இப்போது தான் நடித்து முடித்தேன்.

படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கண்டிப்பாக டிசம்பர் மாதம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்ட விருந்து உறுதி.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!