உக்ரைனுக்கு எதிராக வீட்டோ அதிகாரம்
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் முயற்சித்தால், அந்த முயற்சியை வீட்டோ பயன்படுத்தி தடுக்கும் என ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை உக்ரைனுக்கு வழங்குவது மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதற்கான அறிகுறி என்றும் பிரதமர் கூறினார்.
உக்ரைன் நேட்டோவில் உறுப்பினரானால் ரஷ்யாவுடன் நேட்டோ போர் தொடுக்க நேரிடும் என்று பிரதமர் ஃபிகோ கூறினார்.மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நேட்டோ நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
உக்ரைன் விஜயத்திற்கு முன்னதாக நேற்று (20) பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.மனிதாபிமான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக உக்ரைனுக்கு விஜயம் செய்வதாக பிரதமர் ஃபிகோ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் அங்கத்துவம் பெறுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென்றாலும் உக்ரைன் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
உறுப்புரிமைக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.