செய்தி

தகாத உறவால் வந்த வினை!!!! நடு வீதியில் கொலை செய்யப்பட்ட பெண்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசியாவுக்கு தப்பிச் செல்லவிருந்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் ஊழியராக பணிபுரிந்த பெண், நேற்று மதியம் தனது கடமைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, மடபட பிரதேசத்தில் வசித்து வந்த நாற்பத்தொரு வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தயான பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதான சந்தேக நபர் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் சகோதரர் என தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!