வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள் அமெரிக்காவின் வசம்! ஆசியாவில் விலை அதிகரிக்கப்படுமா?
அமெரிக்கா வெனிசுலாவை ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்நாட்டின் எண்ணெய் இருப்புக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளின் வரிசையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா 16 சதவீதத்தையும், கனடா 10 சதவீதத்தையும் கொண்டுள்ளன.
இருப்பினும், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் “லேசான” எண்ணெயைப் போலல்லாமல், “கனமான” எண்ணெய் உற்பத்தியை இந்த நாடு கொண்டுள்ளது.
இதனை சுத்திகரித்து பயன்படுத்த அதிக அளவிலான உற்பத்தி தேவைப்படுகிறது. பெரிய எண்ணெய் நிறுவனங்களால் இதனை செய்ய முடியும். என்றாலும் அந்த நிறுவனங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை அந்த நிறுவனங்களுக்கு நல்ல வாயப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் இந்த விடயத்தில் நீண்டதூர பொருளாதார விளையாட்டை விளையாடுகிறார் என AMP இன் தலைமைப் பொருளாதார நிபுணர் ஷேன் ஆலிவர் ( Shane Oliver) விமர்சித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கைகளின்படி, அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட இடங்களுக்கு சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றிய பல கப்பல்கள் புறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே ஆசிய நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமா என்பது தொடர்பில் தீவிர ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





