உலகம் செய்தி

50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் வெனிசுலா!

வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை வழங்கும் என்றும், அந்த வருமானம் ஜனாதிபதியாக “தன்னால் கட்டுப்படுத்தப்படும்” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், “வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை உயர்தர, அனுமதிக்கப்பட்ட எண்ணெயை அமெரிக்காவிற்கு மாற்றுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் மேற்படி அறிவிப்பை தொடர்ந்து  இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 01 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் (WTI) விலை 88 சென்ட் அல்லது 1.54 சதவீதம் குறைந்துள்ளது.

வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் எண்ணெய் உற்பத்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்த ட்ரம்ப்,   வெனிசுலா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட தடை  முழு அளவில் அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!