அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கும் வெனிசுலா

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெனிசுலா நாடு தழுவிய ரீதியில் பாரிய இராணுவப் பயிற்சிகளைத் ஆரம்பித்துள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் (Nicolas Maduro) அறிவிப்பின் பேரில், இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவுக்கு சொந்தமான படகு ஒன்றை அமெரிக்கப் படைகள் அழித்தமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“எங்கள் பாதுகாப்பையும், அரசாண்மையைப் பாதுகாக்கும் திறனையும் உறுதிப்படுத்துவதற்காக இந்த பயிற்சி நடைபெறுகிறது” என நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் வெனிசுலாவுக்கு இடையில் முறுகல் நிலையை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)