இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் தம்மாலங்கார தேரர்!

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வண,மாபலகம புத்தசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!