ஐரோப்பா

ரஷ்யாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள் : 8 பேர் பலி!

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் பயணிகள் பேருந்து, டிரக் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மாஸ்கோவிலிருந்து தெற்கே சுமார் 1,500 கிலோமீட்டர் (925 மைல்) தொலைவில் உள்ள காசாவ்யுர்ட் நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மேற்படி வாகனங்கள் மோதியுள்ளன.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!