இலங்கை

இலங்கை: வாகன இறக்குமதி! தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசு எச்சரிக்கை

இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.

இந்த விளம்பரங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

“பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். வாகன இறக்குமதி தொடர்பாக எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அவர் அறிவித்தார். அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என அமைச்சர் ஜயதிஸ்ஸ நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“வாகன இறக்குமதியில் முடிவெடுக்கும் போது, ​​நமது இருப்பு மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் எடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் ஊடகமொன்றுக்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அரசாங்கப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்