இலங்கையில் வாகன இறக்குமதி நடவடிக்கை வெகு விரைவில் சாத்தியமாகும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் பேணினால் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நாட்டின் தேவைகளை உணர்ந்து படிப்படியாக இந்த வர்த்தகத்தை திறக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 21 times, 1 visits today)





