இலங்கை செய்தி

வாகன இறக்குமதிக்கான அனுமதி தற்போது பிற்போடப்பட்டுள்ளது

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைத்துள்ளதுடன், நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை நிறுத்திய போது வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.

அப்போது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 200 ரூபாய் ஆகும்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினரிடம் வினவிய போது, அடுத்த வருட ஆரம்பத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுமென தமது சங்கம் நம்புவதாகத் தெரிவித்தது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை