ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்குள் நுழைந்த வாகனம் – மாணவர்கள் பலர் காயம்

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் கிழக்கில் Tooronga Rd இல் உள்ள ஆரம்பப் பாடசாலையில் மீது கார் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதுவரை குறைந்தது எட்டு பொலிஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
விக்டோரியா ஆம்புலன்ஸ் துணை மருத்துவர்களும் அந்த இடங்களுக்கு வந்துள்ளனர்
தொடக்கப் பள்ளிக்குள் கார் மோதியதில் 5 மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
கார் வேலியில் மோதி, குழந்தைகள் அமர்ந்திருந்த கதிரையில் மோதி முன்னோக்கிச் சென்றதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
காயமடைந்த மாணவர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
(Visited 12 times, 1 visits today)