வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் மீது மோதிய வாகனம் – 4 பிள்ளைகள் பலி

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் உள்ள கட்டடத்தின்மீது வாகனம் மோதியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் 4 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்களாகும். சம்பவம் நடந்தபோது அவர்களில் மூவர் கட்டடத்திற்கு வெளியேயும் இன்னொருவர் உள்ளேயும் இருந்தனர்.

அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தின் சாதாம் என்ற சிறிய ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமுற்ற சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை கூறியது.

வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் இல்லை. அவர் சோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக இலனோய் மாநிலத்தின் ஆளுநர் கூறினார். பாடசாலை முடிந்த பின்னர் பிள்ளைகளை அனுப்பக்கூடிடய நிலையத்தில் சம்பவம் நடந்தது.

YNOT After School Camp என்கிற அந்த நிலையம் பிள்ளைகளுக்கு வெளிப்புற நடவடிக்கைகளை வழங்குகிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!