மணிப்பூரில் 40 பேருடன் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 4 பேர் மரணம்
மணிப்பூரின்(Manipur) சூரசந்த்பூரில்(Surasandpur) ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து ஒரு வேன் விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
40 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு கூர்மையான திருப்பத்தின் போது சமநிலையை இழந்து சூரசந்த்பூர் அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது.
“ஓட்டுநரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, மேலும் அது செங்குத்தான மலைப்பாதையில் விழுந்து நசுங்கியது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தங்முவான்முங் குப்டாங்(Dhangmuwanmung Kuptang), ஹவுச்சின்(Houchin), சிங்ங்கைஹ்சியாம்(Singkaihsiam) மற்றும் நியாங்சானியாங்(Nyangchaniang) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





