பாகிஸ்தானில் விபத்தில் சிக்கிய வேன் : இருவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் வேன் ஒன்று விபத்துகுள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கபால் என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)