அமெரிக்காவில் வேன் மற்றும் லாரி மோதி விபத்து – 7 பேர் பலி

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே பயணிகள் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு இடாஹோவில் உள்ள ஹென்றி ஏரி அருகே 14 பேரை ஏற்றிச் சென்ற வேன் மீது பிக்அப் லாரி மோதியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
“வேனில் இருந்த ஆறு பேரும், லாரியின் ஓட்டுநரும் விபத்தின் விளைவாக இறந்தனர்” என்று இடாஹோ மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“காயங்களின் தீவிரம் காரணமாக” பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களின் அடையாளங்கள் அல்லது தேசிய இனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
(Visited 1 times, 1 visits today)