இந்தியா செய்தி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரபிரதேச நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை

2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேச(Uttar Pradesh) நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அக்டோபர் 29, 2020 அன்று டபுவா(Dapua) காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ரவி பாண்டே(Ravi Pandey) என அடையாளம் காணப்பட்டதாகவும் தலைமை வழக்கறிஞர் ரவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாண்டே, வேலைக்காக உதவி கேட்பது போல் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

சிறுமி ஆரம்பத்தில் பெற்றோரிடம் சொல்லவில்லை, சிறுமியின் பழக்கவழங்கங்ளில் கவனித்த தாய் அவளை மெதுவாக விசாரித்தபோது நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தினாள்.

அதனை தொடர்ந்து அவளுடைய தாய் அவளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!