அமெரிக்கா : லூசியானாவில் புத்தாண்டு தினத்தில் நடத்த அசம்பாவிதம் : 10 பேர் வரையில் பலி!
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஓர்லியன்ஸில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணியளவில் புத்தாண்டைக் கொண்டாடும் சுற்றுலாப் பயணிகள் மீது SUV டிரக் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 10 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வாகனத்தை கொண்டு மோதியது மட்டுமல்லாமல் வாகனத்தின் சாரதி அங்கு குழுமியிருந்த மக்களை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது தெரியவில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் “பெரும் உயிரிழப்பு” ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
குறித்த சாரதி கைது செய்யப்பட்டாரா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
(Visited 2 times, 1 visits today)