ஏமனில் சமீபத்திய வாரங்களாக தாக்குதல்களை தீவிரப்படத்திய அமெரிக்கா – ஈரானுக்கு எச்சரிக்கை!

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முந்தைய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது,
தாக்குதலின் போது £25 மில்லியன் மதிப்புள்ள ரீப்பர் தாக்குதல் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வரும் வாரங்களில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் சாத்தியத்தையும் குறிக்கிறது.
அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் தெஹ்ரான் ‘பெரும் ஆபத்தை’ எதிர்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இது வந்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)